‘மருது’ ரிலீஸ் ; போராட தயாரான விஷால்..!

Marudhu 1

வரும் 20ஆம் தேதி விஷால் நடித்துள்ள ‘மருது’ படம் வெளியாகிறது. ‘கொம்பன்’ முத்தையா இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, அவரின் நண்பனாக நான்காவது முறையாக விஷாலுடன் கைகோர்த்துள்ளார் சூரி.. இமான் இசையமைத்துள்ள இந்தப்படம் பைனான்சியர் அன்பு தயாரிக்கும் இரண்டாவது படமாகும்..

இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட விஷால், கூடவே ஒரு போராட்டத்திற்கு தயாரான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார். வேறு என்ன.? திருட்டு விசிடிக்கு எதிரான போராட்டம் தான்.. ஆனால் முந்தைய முறைகள் போல இல்லாமல் வெகு சீரியஸாக இதில் இறங்க இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் விஷால்.

“என் படம் ரிலீஸாக போகுது ஒரு பக்கம் திருட்டு விசிடிக்காரங்க இப்பவே என் படத்தோட சிடி கவர் எல்லாம் பிரிண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எந்த தியேட்டர்காரங்க ரிலீஸ் அன்னைக்கே திருட்டுத்தனமா காப்பி பண்ண உதவுவாங்குகிறதும் எனக்கு தெரியும்.. ஆனா இந்தமுறை ஆதாரங்களை எல்லாம் தயார் பண்ணிக்கிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன்” என ஆவேசமாக கூறியுள்ளார் விஷால்.