‘புதிய’ பாதையில் அடியெடுத்து வைத்த விஜயகுமார்..!

vijayakumar

இவ்வளவு நாட்களாக நடிப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு நடித்து வந்த நடிகர் விஜயகுமார், அரசியல் பக்கமோ, கட்சிகளில் சேர்வது குறித்தோ கவனம் செலுத்தாமல் இருந்துவந்தார். மேலும் எந்த ஒரு கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்வதோ, குரல் கொடுப்பதோ இல்லாமல் நடுநிலைமை வகித்துவந்தார்.

இந்தநிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழலில் பா.ஜ.கவில் தன்னை இணைத்துகொண்டுள்ளார் விஜயகுமார்… அரசியலுக்குள் நுழைய இதுதான் சரியான தருணம் என நினைத்துவிட்டார் போலும்.. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் விசு பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.