யார் உத்தரவின்படி மொட்டை அடித்தார் உதயா..?

udhaya

தற்போது நடிகர் உதயா நடித்து வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இயக்குனர் ஆஸிப் குரைஷி. இயக்கிவரும் இந்தப்படம் மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதைவிட மிக முக்கியமாக ‘திருநெல்வேலி’ படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்த உதயா கிட்டத்தட்ட 17 வருடம் கழித்து இதில் மீண்டும் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார்

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. இந்தப்படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் பல கெட்டப்புகளில் நடிக்கிறார் உதயா. இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும்.

திரை துறையினரின் ஸ்டிரைக் முடிவுற்றவுடன் ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளிவர இருக்கும் தேதி வெளியாக இருக்கிறது