‘ராணி’யை சிறை பிடித்தார் தியாகராஜன்..!

கடந்த மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கிய (இதுக்கு ஏதாவது புது வார்த்தை கண்டுபிடிங்கப்பா..) படம் தான் ‘க்வீன்(queen). அனுராக் காஷ்யப் தயாரித்த இந்தப்படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்தார். இன்னொரு ஆச்சர்யமான விஷயமாக இந்தப்படத்தின் வசனம் எழுதுவதிலும் துணைபுரிந்துள்ளார் கங்கனா. கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்த்து.

இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளார் நடிகர் தியாகராஜன். ஒவ்வொரு மொழியிலும் இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகிக்கான தேர்வு இனிமேல்தான் தொடங்க இருக்கிறது.