பசங்க-2 ரிலீஸ் ; ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!

pasanga 2

வரும் 24ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பசங்க-2’ படம் ரிலீசாகிறது. இந்தப்படத்தை தயாரித்துள்ள சூர்யா, இதில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும் கூட, இது வழக்கமான தன்னுடைய படம் இல்லை என்றும் குழந்தைகளை மையப்படுத்திய படம் என்றும் பலமுறை சொல்லிவிட்டார்..

பொதுவாக சூர்யாவின் ரசிகர்கள் அவரது பட ரிலீஸ் தினத்தை ஒட்டி, அவருக்கு கட் அவுட், பிளக்ஸ், விளம்பர போஸ்டர்கள் எல்லாம் தியேட்டர்களில் வைப்பதுண்டு… ஆனால் அப்படி எதுவும் வேண்டாம் என்றும் அதற்கு செலவாகும் தொகையை வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிடுமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.