இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சிவகுமார் புகழாராம்..!

Sivakumar
தமிழ்சினிமாவின் மதிப்புமிக்க இயக்குனர்களின் வரிசையில் சமீபத்தில் மறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. அறுபதுகளில் தமிழ்சினிமாவில் கோலோச்சிய இவர் ‘சாரதா’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இரண்டாவதாக இயக்கிய “கற்பகம்’ படத்தில் தான் கே.ஆர்.விஜயாவை அறிமுகம் செய்தார்.

நடுத்தரக் குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அவற்றை சுவைபட கோர்த்து ஒரு கதையாக்கி திரைப்படமாகத் எடுப்பதில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்ற கே.எஸ்.ஜியை மிகச்சிறந்த இயக்குனர் என்று கலையுலக மார்கண்டேயன் சிவகுமார் புகழாராம் சூட்டியுள்ளார்..

அவரது இயக்கத்தில் ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் நடித்த சிவகுமார் கே.எஸ்.ஜியின் கதைசொல்லும் ஆராலை பார்த்து வியந்துபோனாராம். காரணம் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பர், டயலாக் பேப்பர் எதுவும் இல்லாமல் அவனைவரிடமும் வேலைவாங்கி படம் எடுக்கும் ஆற்றல் படைத்தவராம் கோபாலகிருஷ்ணன். கிட்டத்தட்ட 45 படங்களை இப்படித்தான் இயக்கி வெற்றி கண்டுள்ளார் என புகந்துள்ளார் சிவகுமார்.