சிவகார்த்திகேயன் எடுத்துள்ள புதிய முடிவு..!

sivakarthikeyan new decision

ரெமோ படம் வெளியாகி சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படம் கூட அடுத்த டிசம்பரில் தான் வெளியாக இருக்கிறது. வளர்ந்து வருகின்ற நேரத்தில் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இவ்வளவு இடைவெளி விடுவது சரிதானா என்கிற கேள்வி பலரிடமும் இருக்கவே செய்கிறது.. இதற்கு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் இதற்கான விளக்கத்தையும் தான் எடுத்துள்ள புதிய முடிவையும் பற்றி கூறினார்.

“இதுவரை நடித்த படங்கள் எல்லாம் பெரிய படங்களாக, நூறு நாட்களுக்கு குறையாமல் ஷூட்டிங் நடத்த வேண்டி இருந்ததால், ஒவ்வொரு படத்துக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.. இனி வருடத்திற்கு இரண்டு படங்களாவது ரிலீஸ் செய்துவிடவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்” என கூறினார் சிவகார்த்திகேயன்.