அதிரடி வேட்டையில் இறங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

rajini-murugan-pirated-cd 1
பொங்கலுக்கு வெளியான நான்கு படங்களில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி இடத்தை பிடித்துள்ளது. தியேட்டர்களிலும் நல்ல கூட்டம் இருப்பதால் வசூலும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சும்மா இருப்பார்களா திருட்டு விசிடி விற்பனையாளர்கள்..? ஆங்காங்கே ‘ரஜினி முருகன்’ படங்களின் திருட்டு விசிடி களைகட்ட ஆரம்பித்துவிட்டது.. சேலத்தில் இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ‘ரஜினி முருகன்’ படத்தின் திருட்டு டிவிடிக்களை விற்ற கடைகளில் அதிரடி சோதனைகளில் இறங்கி நூற்றுக்கணக்கில் ‘ரஜினி முருகன்’ பட டிவிடிகளை கைப்பற்றியுள்ளார்கள்..