சத்யராஜ், பாக்யராஜ் பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..!

Sivakarthikeyan-policy
சத்யராஜும் பாக்யராஜும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள்.. அதனால் அவர்கள் தங்களது படங்களில் எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்றி நடித்தார்கள்.. அதுபோல சிவகார்த்திகேயனும் நடிக்கப்போகிறாரா என்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம்.. இவர் பின்பற்றுவது அவர்களின் இன்னொருவிதாமான பழக்கத்தைத்தான்.

முன்பு சத்யராஜும் பாக்யராஜும் பீக்கில் இருந்த நேரத்தில் தங்களது நண்பர்களை தயாரிப்பாளர்களாக ஆக்கி ஆசாகு பார்த்தார்கள். அந்தவகையில் சத்யராஜின் படங்கள் பலவற்றை அவரது நண்பரும் மேனேஜருமான ராமநாதனும், பாக்யராஜின் சில படங்களை அவரது நண்பரான பழனிச்சாமியும் தயாரித்தார்கள்..

அந்தவகையில் தனது நண்பரான ஆர்.டி.ராஜாவை மோகன்ராஜா இயக்கத்தில் ஏற்கனவே தான் நடிக்கும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாற்றிய சிவகார்த்திகேயன், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தையும் ஆர்.டி.ராஜாவையே தயாரிக்க சொல்லியிருக்கிறார். பாராட்டப்படவேண்டிய நல்ல பாலிஸி தான்.