‘கபாலி ‘நெருப்புடா’ டீசர் ; டப்மாஷில் கலக்கும் சிவகார்த்திகேயன்..!

siva dubmash

கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது.. கிட்டத்தட்ட இதற்கு முன் வெளியான கபாலி டீசரைபோன்றே இந்த பாடல் டீசரும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயனை ரொம்பவே கவர்ந்துவிட, அவர் என்ன செய்தார் தெரியுமா..?

காரில் பயணம் செய்துகொண்டே அருகில் உள்ள தனது நண்பரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜுடன் இணைந்து கபாலி ‘நெருப்புடா’ பாடலின் வரிகளுக்கு டப்மாஷில் ஆக்சன் செய்து அதை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த அருண்ராஜா காமராஜ் தான் ‘நெருப்புடா’ பாடலை எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.