‘ரெமோ’ நன்றி விழாவில் சிவகார்த்திகேயனை அழ வைத்தது யார்..?

remo-thanks-meet
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானது.. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.. கடந்த வெள்ளியன்று வெளியான படங்களிலேயே இதுவரை சுமார் 24 கோடி ரூபாய் வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது ரெமோ..

இந்தப்படத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறும் நிகழ்ச்சி நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது.. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.. தவிர இந்தப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விநியோகஸ்தர்களும் மேடையில் அமரவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தயாரிப்பாளர் ராஜாவின் இரண்டரை வருட அர்ப்பணிப்பு உணர்வு பற்றி குறிப்பிட்டபோது சில நொடிகள் கண்கலங்கி விட்டார்.. அதன்பின் எமோஷனலாக பேச ஆரம்பித்தார்.

“நாங்கள் நல்ல படம் கொடுக்கவேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறோம்.. எனக்கு பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை.. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா, சரியாக தூங்கி எத்தனை நாட்களாகிற்று தெரியுமா..? தயவு செய்து எங்கள் வேலையை தடுக்காதீர்கள்.. உங்களிடம் உதவி கேட்கவில்லை.. எங்கள் வேலையையாவது செய்யவிடுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என அழுதே விட்டார்..

ஆமாம், சிவகார்த்திகேயனை இந்த அளவுக்கு அழ வைத்தது யாராக இருக்கும்..?