டி.எஸ்.பியை கெளரவப்படுத்தப்போகும் சிரஞ்சீவி…!

Actor Siranjeevi Honoured To Music DeviSriprasad

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர் டி.எஸ்.பி என செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். ஒவ்வோரு வருடமும் தனது இசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவிஸ்ரீ பிரசாத் இசைப்பயணம் மேற்கொண்டு இசைப்பிரியர்களுக்கு இன்பவிருந்து அளித்து வருகிறார்.

காரணம் இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் அமெரிக்காவில் 7 இடங்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.

இவரது இசை அர்ப்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை உலகில் முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடிய தொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபுதேவா, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். விரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை சுற்றுப்பயணம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.