ரஜினியின் இடத்திற்கு அடுத்ததாக நான் தான் என பலர் போட்டிக்கொண்டு இருந்தாலும் அப்போதும் இப்போதும் ரஜினி ரசிகராகவே இருக்கிறார் சிம்பு.. அவரது பல படங்களிலும் பேச்சுக்களிலும் ரஜினி அவ்வப்போது வெளிப்படுவதை பார்க்கமுடியும்.
அந்தவகையில் சமீபத்தில் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ள வந்த சிம்புவை கண்டு அனைவரும் அசந்துவிட்டனர். காரணம் ரசிகர்களிடம் பிரபலமான காலா ரஜினியின் கருப்பு வேட்டி-சட்டை அணிந்து கொண்டு அதே ஸ்டைலில் அரங்கத்திற்குள் நுழைந்தாராம் சிம்பு.
சிம்பு தற்போது மணிரத்னம் டைரக்சனில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.