அனிருத்-சந்தானத்துடன் சிம்பு வைத்த சக்சஸ் பார்ட்டி..!

simbu celebrates
கடந்த வாரம் சிம்பு நடித்த இது நம்ம ஆளு’ படம் வெளியானது.. சிம்புவின் முந்தைய படங்களான ‘போடா போடி’ மற்றும் ‘வாலு’ படங்களை போலவே இந்தப்படமும் வெளியாவதில் பல தடைகள் ஏற்பட்டு தாமதமாகத்தான் வெளியானது.. சிம்பு-நயன்தாரா, சந்தானம்-சூரி என்கிற என்கிற அரிதான ஆட்களின் கூட்டணியுடன் இந்தப்படம் வெளியானது.

அந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளதாக சிம்பு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சந்தானம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பார்ட்டி கொடுத்து வெற்றியை கொண்டாடியுள்ளார் சிம்பு. ‘பீப்’ பாடல் விவகாரத்துக்கு பிறகு பிரிந்துவிட்டார்கள் என சொல்லப்பட்ட சிம்புவும் அனிருத்தும் இணைந்து காட்சி தருவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.