லிப்லாக் காட்சிகளுக்கு இப்போதே ரிசர்வேஷன் பண்ணிவைக்கும் சிபிராஜ்..!

sibiraj

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா படம் வரும் வெள்ளி (டிச-8) அன்று ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிபிராஜ், லிப்லாக் காட்சிகளில் நடிப்பது குறித்த தனது புதிய முடிவையும் ஒரு கோரிக்கையாக அறிவித்தார்.

“படப்பிடிப்பின் போது லிப்லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன், என்னை ரோல் மாடலாக பார்க்கிறான்… நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப்லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப்லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்” என ஜாலியாக பேசினார் சிபிராஜ்.