கௌதம் மேனன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் சதீஷ்..!

satheesh
கடந்த மாதங்களில் வெளியான ‘உப்புக்கருவாடு’ மற்றும் ‘தற்காப்பு’ ஆகிய இரண்டு படங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒருவர் தான் சதீஷ்.. துறுதுறுவென களையான முகத்துடன் காட்சி தரும் சதீஷ், சமீபத்தில் கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீசரில் தோன்றி ஆச்சர்யப்படவைத்தார்.

விசாரித்தால் இந்தப்படத்தில் சிம்புவின் நண்பராக நடித்துள்ளாராம் சதீஷ். ஏற்கனவே ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சதீஷிற்கு சின்னதாக ஒரு ரோல் கொடுத்து சினிமாவிற்குள் இழுத்தவர் கௌதம் மேனன் தான்.. தொடர்ந்து சதீஷிற்கு தனது படங்களில் நடனம் அமைக்கும் வாய்ப்பையும் வழங்கி வந்தவர், தற்போது அவருக்கு நல்லதொரு அடையாளம் தரும் விதமாக சிம்புவின் நண்பன் கதாபாத்திரத்தை கொடுத்துள்ளாராம்.

சிம்புவுடன் நடிப்பது சதீஷுக்கு இதுதான் முதல்முறை என்றாலும், அவருடைய படங்களில் ஏற்கனவே கோரியாகிராபி பண்ணியிருக்கிறாராம்.. ஆக அந்த நட்பு அவரது நண்பராக நடிக்கும்போது இன்னும் உதவியதாம். சிம்புவும் சினிமா பற்றிய பல நுணுக்கங்களை சதீஷுக்கு சொல்லித்தந்தாராம்.. அடுத்து எந்த படங்களிலும் கமிட் ஆகாவிட்டாலும் தற்போது ‘கபாலி’ மற்றும் ‘ரங்கூன்’ ஆகிய படங்களில் நடனம் அமைத்து வருகிறாராம் சதீஷ்.