‘நாடோடிகள்-2’வை தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்-2’..!

sasikumar_sundarapandian-2

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை சுந்தரபாண்டியன் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார் சசிக்குமார். கடந்த 2012ல் வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ‘சுந்தரபாண்டியன்’ சசிக்குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமும் கூட.

அதன்பின் தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல், ‘சத்திரியன்’ என தனக்கான அடையாளங்களைப் பதிவு செய்தாலும் முதல் படத்தை போன்ற மிகப்பெரிய வெற்றியை மீண்டும் அவரால் தொடமுடியவில்லை என்பதே உண்மை. இதோ அந்த வெற்றியை நோக்கி சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன் இருவரின் கூட்டணி மீண்டும் அமைகிறது.

இந்தமுறை கூட்டணி அமைப்பது ‘சுந்தரபாண்டியன்-2’ படத்திற்காக. .தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி ‘நாடோடிகள் 2′ படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப்படம் முடிந்த கையோடு ‘சுந்தரபாண்டியன்-2′ படம் தொடங்கும் என தெரிகிறது.