‘சர்வர் சுந்தரம்’ ஆக மாறும் சந்தானம்..!

santhanam
இந்த வரம் சந்தானம் நடித்த வாலிபராஜா ரிலீசாகும் என எதிர்பார்த்து வெளியாகாமல் போனதில் ரசிகர்களுக்கு வருத்தமே.. அந்த குறையை போக்கும் விதமாக சந்தானம் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அடுத்து நடிக்கவிருக்கும் படம் பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. படத்திற்கு சர்வர் சுந்தரம் என பெயர் சூட்டியுள்ளார்கள்..

ஏவி.எம் தயாரிப்பில் பலவருடங்களுக்கு முன் நாகேஷ் நடித்த படம் தான் சர்வர் சுந்தரம்.. தற்போது சந்தானம் நடிக்கவுள்ள கதையில் அவர் ஸ்டார் ஹோட்டல் சமையற்காரராக நடிப்பதால் இந்த தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என ஏவி.எம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்று வைத்துள்ளார்கள். இந்தப்படத்தை ஆனந்த் பால்கி என்பவர் இயக்குகிறார்.