சந்தானத்தின் தந்தை காலமானார் ; திரையுலகினர் அஞ்சலி..!

Santhanams-Father

நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் நேற்று மாலை காலமானார். 69 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூரில் நடைபெற இருக்கிறது.. திரையுலக பிரபலங்கள் பலரும் சந்தானத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

லொள்ளுசபா மூலம் சின்னத்திரையில் நுழைந்த சந்தானத்திற்கு, ஆரம்பத்தில் இருந்து ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தியவர் அவரது தந்தை நீலமேகம் தான். சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ விழாவில் தனது தந்தை நீலமேகத்தை மேடையேற்றி கௌரவப்படுத்தினார் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது..