“ஹேய் காக்காமுட்டை’ ; ரமேஷ் திலக்கை அதிரவைத்த ரஜினி..!

ramesh-thilak-in-kabali-1

திருப்பதியில் பெருமாள் தரிசனம் கிடைத்தாலும் சிலருக்கு திருப்பதி லட்டு கிடைக்கும் பாக்கியம் இருக்காது. அந்தமாதிரி சொப்பர்ச்டார் ரஜினி படத்தில் நடிக்க எதிர்பாராதவிதமாக பல சின்ன நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கூட, அவருடன் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆனால் ‘காக்கமுட்டை’ புகழ் ரமேஷ் திலக் அந்தவகையில் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ரமேஷ் திலக்கிற்கு அதுவும் ரஜினியுடன் ஒரே பிரேமில் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உற்சாகத்தில் மிதக்கிறார் மனிதர்..

ரமேஷ் திலக் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தினத்தன்று வழக்கம்போல படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரஜினி ரமேஷ் திலக்கை பார்த்து “ஹேய் காக்க முட்டை” என கூற ஆச்சர்யத்தால் திக்குமுக்காடி போனாராம் ரமேஷ் திக.. தன்னையெல்லாம் ரஜினிக்கு தெரியவா போகிறது என நினைத்தவருக்கு உண்மையிலேயே ரஜினி இப்படி அழைத்ததும் செம ஷாக் தான். அதுமட்டுமல்ல சூதுகவ்வும் படத்திலேயே ரமேஷ் திலக்கின் நடிப்பை கவனித்து ரசித்ததாகவும் ரஜினி சொல்ல வானத்தில் மிதக்கிறார் ரமேஷ் திலக்.