இமயமலையில் தியான மண்டபம் கட்டிய சூப்பர்ஸ்டார்..!

sri babaji ashram

படப்பிடிப்பு இல்லாத சமயங்களிலோ, அல்லது ஒரு படத்தை முடித்தபின்னரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி ஸ்ரீபாபாஜியை தரிசிக்க ஆன்மிக சுற்றலாவாக இமய மலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.. அங்கே ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் தியான மண்டபம் கட்டுவது ரஜினியின் நீண்டநாள் கனவாக இருந்தது.

தற்போது, அதற்கு செயல் வடிவம் கொடுத்து இமய மலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர். இந்த மண்டபத்தின் கிரஹபிரவேச விழா வரும் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவதாக உள்ளாராம்..