இயக்குனர் விஜய்க்கு புகழாரம் சூட்டிய பிரபுதேவா..!

a-l-vijay-prabhu-deva (1)

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னா, ஆகியோரை வைத்து ‘DEVI(L)’ என்கிற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் இயக்கி வருகிறார்.. இப்படத்துக்கு ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் விஜய்யுடன் இணைந்து கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டும், கவுரவ வேடத்தில் இயக்குனர் பாரா கானும் நடித்திருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதை இயக்குனர் விஜய் அழகாக கையாண்டு வருகிறார். விஜய்யின் சிறப்பே இக்கட்டான சூழ்நிலைகளை பொறுமையாகவும், அழகாகவும் கையாளும் திறமை தான் என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபுதேவா