மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் நட்டி..!

natty 1

தமிழ், இந்தி என இரண்டு திரையுலகிலும் மோஸ்ட் வான்டட் கேமேராமேனாக வலம் வருபவர்தான் நட்டி.. ஒரு நடிகராகவும் ‘சதுரங்க வேட்டை’ படத்துக்குப்பின் இவருக்கான மார்க்கெட் லெவல் ஏறியிருக்கிறது.. கடந்த வருடம் விஜய் நடித்த ‘புலி’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நட்டி, அடுத்ததாக ஒன்றிரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்..

இப்போது மலையாள திரையுலகில் இருந்து ஒளிப்பதிவாளராக பணியாற்ற நட்டிக்கு அழைப்பு வந்துள்ளது.. படத்தை இயக்குவது அறிமுக பெண் இயக்குனரான ரோஷிணி தினகர் என்றாலும் கூட பிருத்விராஜ் நடிக்கும் படம் என்பதாலும் படத்தின் காதல் கதை புதுமையாக இருப்பதாலும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டாராம் நட்டி.