‘சார்லி’யாக மாற மாதவனால் மட்டுமே முடியும்..!

madhavan as charlie
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது. ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற ஆச்சர்யத்தை படம் முழுவதும் நிரப்பினார் துல்கர் சல்மான்.

ஒரு மனிதனின் உண்மையான சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை துல்கர் கதாபாத்திரம் மூலமாகவும், ஆர்வத்தை தூண்டும் திரைக்கதை மூலமாகவும் விஷுவலான கவிதையாக்கி இருந்தார்கள். படத்தில் கதாநாயகியாக நடித்த பார்வதி மட்டும் சளைத்தவரா என்ன..? ‘டெஷா’ கேரக்டரில் பின்னியிருந்தார் பின்னி.

இந்தப்படம் வெளியான ஓரிரு மாதங்கள் கழித்து இதை தமிழில் ரீமேக் பண்ணப்போவதாகவும் அதில் மாதவன் தான் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் கசிந்தது. அது இப்போது உண்மையாகி இருக்கிறது.. ஆம். இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார்.

அந்தவிதத்தில் மாதவனால் மட்டுமே ‘சார்லி’யாக மாற முடியும் என்பதை மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் பலரும் முழு மனதாக ஒப்புக்கொண்டார்களாம். படத்தில் பார்வதி கேரக்டரில் நடிப்பதற்குத்தான், கதாநாயகி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.