‘ஒரு கோடி செலவு செய்கிறேன்” ; போராட்டக்காரர்களை நெகிழ வைத்த லாரன்ஸ்..!

ragava_larans

தமிழகம் முழுவர்த்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.. சென்னை மெரினாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல திரையுலக பிரபலங்களும் அவர்களுக்கு தனக்ளது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் போராட்ட காலத்துக்கே நேரடியாக வந்தார் நடிகர் லாரன்ஸ்.. அவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் நேரில் வந்ததுடன், அவர்களது போராட்டம் வெற்றி பெற ஆதரவு தெரிவித்ததுடன், அவர்களுக்கு தேவையான சாப்பாட்டு தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை உடனே அனுப்பி வைப்பதாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் கூட செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி போராடும் மாணவர்களை நெகிழ வைத்தார்.