ரஜினியை சந்தித்தார் லாரன்ஸ்..!

raghava-lawrance-with-super-star

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.. இல்லை பக்தர் என்றே கூட சொல்லலாம். தற்போது ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ என்கிற படத்தில் நடித்துவருகிறார் லாரன்ஸ். இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார்.

மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்.