‘மாரி-2’வில் இணைந்தார் கிருஷ்ணா..!

krishna

வெற்றி பெற்ற படங்களையோ, அல்லது மக்களிடம் வரவேற்பு பெற்ற படங்களையோ அவற்றின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது ட்ரெண்டிங்காகவே மாறிவிட்டது.. அந்தவகையில் தனுஷ்-பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘மாரி-2’ என்கிற பெயரில் தயாராகிறது.

தனுஷுக்கு ஜோடியாக இதில் ‘பிரேமம்’ புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி நடிக்கிறார். வில்லனாக மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக வளர்ந்துவரும் டொவினோ தாமஸ் என்பவர் நடிக்கிறார். இந்தநிலையில் நடிகர் கிருஷ்ணா இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக இயக்குனர் பாலாஜி மோகன் உறுதி செய்துள்ளார்.