ஜீவா vs ஜீவா ; எதிர்பாராத ட்விஸ்ட்..!

jeeva vs jeeva

ஜீவாவுக்கு கடந்த வருடம் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என்கிற ஒரே படம் மட்டும் வெளியானது.. இந்தநிலையில் தற்போது ஜீவா நடிப்பில் ‘கீ’ மற்றும் ‘கலகலப்பு-2’ என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன.

இதில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கியுள்ள ‘கீ’ படமும் ஜீவாவிற்கு நம்பிக்கை தரும் படமாகவே உருவாகியுள்ளது. கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் ஆர்.ஜே.பாலாஜி, அனைகா சோட்டி, சுகாசினி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் பிப்-9ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

அதேசமயம் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்திலும் ஜீவா நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம், தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது இந்தப்படமும் பிப்-9ஆம் தேதியே ரிலீஸாக உள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜீவாவுக்கு போட்டியாக இருக்கவேண்டாம் என்றுதான் விஷால் தனது இரும்புத்திரை படத்தின் ரிலீஸ் தேதியை கூட தள்ளிவைத்தார். ஆனால் இப்போது ஜீவாவுக்கு போட்டியாக ஜீவாவின் இன்னொரு படமே களமிறங்குவது ஆச்சர்யமான நிகழ்வுதான்.