பிப்-9ல் ஜீவாவின் ‘கீ’ ரிலீஸ்..!

kee release date 1

ஜீவா நடித்துவரும் புதிய படம் தான் ‘கீ’.. ஒற்றை எழுத்து டைட்டிலை கொண்ட இந்தப்படத்தை ‘நாடோடிகள்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் ஆர்.ஜே.பாலாஜி, அனைகா சோட்டி, சுகாசினி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப்படம் வரும் பிப்-9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்குமுன் ‘ஈ’, ‘கோ’ என அவருக்கு சென்டிமென்ட்டாக ஒர்க் அவுட்டான ஒற்றை எழுத்து டைட்டில் இதிலும் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.