படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த ‘போக்கிரி ராஜா’..!

jeeva briyani virundhu

நடிகர்களை பொறுத்தவரை தங்களது பிறந்தநாளையும் வழக்கமான ஒரு வேலை நாளாகவே நினைத்து படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினருடன் அதை கொண்டாட விரும்புவார்கள். இதற்கு நடிகர் ஜீவாவும் விதிவிலக்கல்ல. தற்போது ஜீவா, ஹன்ஷிகா, சிபிராஜ் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா நடித்துவரும் ‘போக்கிரி ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்திற்காக வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ ரெயின்கோ” என்ற பாடலுக்கு ஜீவா, ஹன்சிகா நடனமாடும் வித்தியாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இப்பாடல் காட்சி ஜீவாவின் பிறந்தநாளன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் ‘போக்கிரி ராஜா’ படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.