மயில்சாமியை கௌரவப்படுத்தி நன்றிக்கடன் தீர்த்த ஜெயம் ரவி..!

Yenru Thaniyum Audio Launch - jayam ravi
மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘என்று தணியும்’. கிருஷ்ணகுமார் பாரதி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நட்புக்காக கலந்துகொண்டு, மயில்சாமியை கௌரவப்படுத்தி, மகிழ்ச்சியடைய வைத்தார் ஜெயம் ரவி…

தான் அறிமுகமான ‘ஜெயம்’ படத்தில் மயில்சாமி தனக்கு பக்கபலமாக நடித்து வெற்றி தேடித்தந்த அந்த நன்றிக்கடனுக்காக அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜெயம் ரவி இந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி மட்டுமல்ல, தனது பட விழாக்களுக்கு கூட வருவது இல்லை என்கிற குற்றச்சாட்டு ஆளாகியுள்ள நடிகர் சந்தானம் மயில்சாமியின் நட்புக்காக இந்த விழாவில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தினார்.