இயக்குனர்களுடன் மறுகூட்டணி அமைப்பதில் ஜெயம் ரவிக்கு முதலிடம்..!

jayam ravi 2
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனருடன் இணைந்து ஹிட் படம் கொடுக்கும் முன்னணி நடிகர்கள், படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து அந்த இயக்குனர்களுடன் இணைந்து படம் பண்ணுவது என்பது அரிதான விஷயமாகத்தான் இருக்கிறது.. விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என ஒன்றிரண்டு பேர்தான், தங்களது முந்தைய வெற்றிப்பட இயக்குனர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் நடிகர் ஜெயம் ரவி இவர்களை எல்லாம் தாண்டி மறுகூட்டணி அமைப்பதில் வேகம் காட்டி ஆச்சர்யபடுத்துகிறார்.. கடந்த வருடத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்தப்படத்தின் இயக்குனர் லட்சுமணுடன் இணைந்து ‘போகன்’ படத்தில் பணியாற்றி வருகிறார்..

அதேபோல இந்த வருடம் வெளியான ‘மிருதன்’ படம் நன்றாக போகாவிட்டாலும் கூட அந்தப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். இதுதவிர, கடந்த வருட சூப்பர்ஹிட்டான ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணனுடன் மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளார் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் வளர்த்துவிட்ட இயக்குனர்களை மறக்காத ஜெயம் ரவியை பாராட்டியே ஆகவேண்டும்.