தனுஷ் தான் நடித்துவந்த ‘ரயில்’ மற்றும் ‘கொடி’ படங்களை முடித்துவிட்டார்.. இந்தநிலையில் தமிழில் கௌதம் மேனன்-தனுஷ் என்கிற புதிய ஸ்டைலிஷ் கூட்டணியாக கைகோர்த்து இன்றுமுதல் தனகளது அடுத்த படமான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள்..
இந்தப்படத்தின் கதாநாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் அதற்போது உடைந்துள்ளது. ஒருபக்க கதை பட நாயகியான மேகா ஆகாஷ் தான் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் இந்த இரண்டு படங்கள் இல்லாமல், விஷ்ணு-உதயநிதி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.