ஆர்யாவை கேப்டனாக கொண்ட சென்னை ராக்கர்ஸ் அறிமுக விழா..!

chennai rockers

சிசிஎல்-க்கு பிறகு இதோ வருகிறது, சிபிஎல் (செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக்), தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா… சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த சிபிஎல்-ன் தமிழக அணி தான், சென்னை ராக்கர்ஸ். இந்த அணியில், நடிகர் ஆர்யா (கேப்டன்), அபிநய் வட்டி, அமிதாஷ், பரத், முன்னா, பிரசன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா மற்றும் ரூபா மஞ்சரி ஆகியோர் விளையாட இருக்கின்றனர். இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

செப்டம்பர் 18ல் சென்னையில் முதல் போட்டியுடன் தொடங்கும் சிபிஎல், நவம்பர் 12ல் மலேசியாவில் கோலாலம்பூரில் இறுதிப்போட்டி மற்றும் விழாவுடன் நிறைவு பெறுகிறது. “தரமான பாட்மிண்டன் ஆட்டத்தை புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள்.., என்கிறார், இந்த சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளர் சி.ஆர்.வெங்கடேஷ்.

சென்னை ராக்கர்ஸ்’ அணியை பற்றி மேலும் அவர் கூறுகையில், “தமிழ் திரையுலகில் ‘சாக்லேட் பாய்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மாதவன் எங்கள் அணியின் விளம்பர தூதராகவும், நடிகை அமலா பால் எங்கள் அணியின் ஊக்குவிப்பாளராகவும் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.

சென்னை, கொச்சின், ஹைதெராபாத் மற்றும் கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கும் ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் – 2016′ போட்டியின் இறுதி ஆட்டமானது, மலேஷியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.