இது ‘வணங்காமுடி’ போலீஸ்.. அரவிந்த்சாமியின் புது அவதாரம்..!

vanangamudi

நம்பமுடியாத அதிசயங்கள் எல்லாம் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும்.. அரவிந்த்சாமியும் அந்தப்பட்டியலில் ஒருத்தர் தான்.. ஒருகாலத்தில் சினிமாவில் ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த அரவிந்த்சாமி பின்னர் சினிமாவே வேண்டாம் என பிசினஸை கவனிக்கப்போனதும், பின் தனி ஒருவன்’ படத்திற்காக இயக்குனர் மோகன்ராஜா அவரை இழுத்துவந்ததும் கூட சில நடிகர்களுக்கும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

ஆனால் இந்த செகன்ட் இன்னிங்க்ஸில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக அவர் பட்டையை கிளப்புவார் என யார்தான் எதிர்பார்த்திருக்க்க முடியும்.. இதோ பல படங்களில் தொடர்ந்து கதையின் நாயகனாக முன்னணி ஹீரோக்களை விட பிஸியாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. அதில் ஒன்றுதான் செல்வா டைரக்சனில் அவர் நடித்துவரும் ‘வணங்காமுடி’. முதன்முறையாக இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று முடிந்துள்ளது. இங்கே பிரமாண்டமான செட் அமைத்து பாடல் காட்சியை படமாக்கி முடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து சேசிங் மற்றும் இன்னொரு பாடல் காட்சிக்காக கொடைக்கானல் பறக்க இருக்கிறது வணங்காமுடி டீம்.. அதை தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தினால் ஷூட்டிங் ஓவர்.

ரொமான்ஸ் நாயகனை வில்லனாக பார்க்க முடியும் என நாம் கனவிலும் நினைத்திராத ஒன்றை தனி ஒருவன், போகனில் நிகழ்த்திக்காட்டிய அரவிந்த்சாமி, அதேபோல இந்த வணங்காமுடியில் அதிரடி போலீசாகவும் அசத்துவார் என உறுதியாக நம்பலாம்.