அரவிந்த்சாமியின் கள்ளபார்ட் துவங்கியது

kallapart

அடுத்தடுத்து அரவிந்த்சாமியின் பாடங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் புதிய படம் தான் ‘கள்ளபார்ட்’. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த நிறுவனம் இந்தப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.