நாகேஷ் பெயரை ஞாபகப்படுத்தும் படத்தில் நடிக்கும் ஆரி..!

aari

ஒரு காலத்தில் தி.நகரில் பாண்டிபாஜார் சாலையில் பிரபல நடிகர் நாகேஷுக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று இருந்தது. அந்த இடத்திற்கு ‘நாகேஷ் தியேட்டர்’ ஸ்டாப் என்றுதான் பெயர். இப்போது நெடுஞ்சாலை, மாயா படங்களைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாகேஷ் திரையரங்கம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.’. இப்படத்தை ‘அகடம்’ என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இசாக் இயக்குகிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரும், நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் நடிக்கிறார்கள். எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஸ்ரீ இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டராக கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், பிரபு சாலமனின் ஆஸ்தான எடிட்டரான எல்.வி.கே.தாஸ் என முன்னணி தொழில் நுட்ப க்ளைஞர்கால் இந்தப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.