‘தி லிட்டில் பேக்டரி’ மூலமாக குழந்தைகளை குதூகலப்படுத்திய ஆதி

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.

சமீபத்தில், அந்த குழந்தைகளில் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9 வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்கள் உடுத்த ஆசைப்படும் மிக உயர்ந்த ஆடைகளை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உடுத்தி அழகு பார்க்கப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளரை கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டு அதை இந்த ஆண்டு காலண்டராக வடிவமைத்து, அந்த காலண்டரை அவர்களுக்கே பரிசாக நடிகர் ஆதி வழங்கினார். அதன் பின் அந்த ஆடைகளையும் அவர்களுக்கே பரிசாக வழங்கப்பட்டது. அந்தவகையில் அந்த குழந்தைகலுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

இது பற்றி லிட்டில் பேக்டரி அமைப்பினர் கூறும் போது, “இந்த போட்டோஷூட் இந்த குழந்தைகளை பெரும் வெளிச்சத்திற்கு அழைத்து வரும் அற்புதமான வாய்ப்பு. கீழ்மட்டத்திலிருக்கும் இந்த குழந்தைகளை புகழ் வெளிச்சத்திற்குள் அழைத்து வருவது மகிழ்ச்சி. இவர்களுக்காக சிரத்தை எடுத்து இந்த ‘தி லிட்டில் பாக்டரி’ செயல்பட்டு வருகிறது.

இக்குழந்தைகள் நம்பிக்கையின் வடிவம் நம் தைரியத்திற்கான அடையாளம் இந்த முழு முயற்சியில் ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டர்கள் முடிந்தளவு இக்குழந்தைகளின் உலகத்தில் நம்பிக்க்கையின் ஒளியை பாய்ச்சி உள்ளார்கள். இதற்கு பக்க பலமாக நடிகர் ஆதி உள்ளார்” என்றனர்..