“கமர்ஷியல் படத்தில் நடிக்கும் ஆசை எனக்கும் இருக்கு” ; ‘கருப்பன்’ விஜய்சேதுபதி..!

karuppan vijay sethupathi

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக தான்யா நடிக்க, பசுபதியும் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தநிலையில் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர் ‘கருப்பன்’ படக்குழுவினர்.

இந்தப்படம் பற்றி பேசிய விஜய்சேதுபதி, இது கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்.. ஒரு கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யமான காதலை சொலும் படம்.. இந்தப்படத்தை பார்த்தால் நிச்சயம் கணவர்களுக்கு தங்கள் மனைவி மீதான காதல் அதிகமாகி விடும்.. இருந்தாலும், ஆக்சன், சென்டிமென்ட் என கலவையான அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

அப்படியானால் யதார்த்தமாக நடிக்கும் நீங்கள் இனி கமர்ஷியல் ஹீரோவாக மாறிவிட்டீர்களா என கேட்டால், எனக்கு பிடிக்கின்ற, அதேசமயம் தயாரிப்பளருக்கு லாபம் தருகின்ற, பேண்டசி படங்களில் நடிப்பதற்கு நான் விரும்புகிறேன். அதைத்தான் நீங்கள் கமர்ஷியல் படம் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் எனக்கும் கமர்ஷியல் படங்களில் நடிக்க எனக்கும் ஆசைதான்” என கூறினார் விஜய்சேதுபதி.

இந்தப்படத்தில் காளையை அடக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறதே.. இது ஜல்லிக்கட்டுக்கான படமா, நீங்கள் நிஜமாகவே காளையை அடக்கினீர்களா என கேட்டால், “இது ஜல்லிக்கட்டுக்கான படம் அல்ல, ஆனால் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களுக்காக நன்றி நன்றி சொல்லியிருக்கும் படம்.. நான் காளையை அடக்குவது போன்ற காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன” என்று கூறினார் விஜய்சேதுபதி