விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ டீசரை வெளியிடுகிறார் விஷால்..!

achaminri 2

நடிகர் விஜய் வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். முந்தைய படத்தை தயாரித்த வினோத்குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார்களாம்.

இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டிய நடிகர் விஷால், படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறாராம்.