ஆயுத பூஜைக்கு மோதும் நான்கு படங்கள்..!

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரம் கிடைத்த மாதிரி.. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை தைரியமாக ரிலீஸ் செய்யலாம்.. அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கு மொத்தம் நான்கு பெரிய படங்கள் வெளியாக இருப்பதாக தெரிகிறது.

இதில் இரண்டு படங்களின் ரிலீஸ் உறுதியாகிவிட்டது.. இன்னும் இரண்டு படங்கள் உறுதியாகிவிடும். விக்ரம்-சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘1௦ எண்றதுக்குள்ள’, விஜய்சேதுபதி-நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘நானும் ரௌடி தான்’, ஆகிய இரண்டு படங்களுக்கு அக்-21 ரிலீஸ் என பிக்ஸ் பண்ணிவிட்டார்கள்.

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’, மற்றும் சந்தானம்-சேது காம்பினேஷனில் இரண்டாவதாக உருவாகியுள்ள ‘வாலிப ராஜா’வும் இந்த ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றன.. தேதிகள் வேண்டுமானால் ஒருநாள் முன்னெ பின்னே மாறலாம்.. இந்த பண்டிகையை விட்டால் அடுத்து தீபாவளி வந்துவிடும். அதற்கென காத்திருக்கும் படங்கள் இருப்பதால் இதுதான் மற்ற இரண்டு படங்களும் வெளியாக சரியான தருணம்.