ஜெயம் ரவி படத்தில் ஆர்யாவும் உண்டு..!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒரு கெஸ்ட் ரோல் இருக்கிறது என்றால் ‘போனை போடுடா ஆர்யாவுக்கு’ என்று சொல்லும் அளவுக்கு நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்து தருவார் ஆர்யா. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, இப்போது பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என ஆர்யாவின் கெஸ்ட்ரோல் பட்டியல் நீள்கிறது.

தற்போது ஜெயம் ரவி, ஹன்சிகா  நடித்துவரும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா. அதாவது படத்தில் நடிகர் ஆர்யாவாகவே வருகிறாராம் ஆர்யா. இந்தப்படத்தை இயக்கிவரும் லட்சுமணும் ஆர்யாவும் சினிமாவில் நுழைவதற்கு முன்பே ஜிம் மூலம் பழக்கமான நண்பர்களாம். அதனால் லட்சுமண் கேட்டதும் உடனே ஒகே சொல்லிவிட்டாராம் ஆர்யா.