காதல் ரசம் சொட்டும் கதையில் ஆரி-ஐஸ்வர்யா தத்தா..!

aari-aiswarya dutta

பிக் பாஸ் சீசன்-2வில் பங்கேற்ற பினர் ஐஸ்வர்யா தாத்தாவின் மார்க்கெட் சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்றே சொல்லலாம். அந்தவகையில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகப்பேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு.

60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம்.

இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள் .இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை. ‘அய்யனார்’ படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.