‘ஆறாம் வேற்றுமை’ ; தமிழில் உருவாகும் ஒரு ‘அபகலிப்டா’..!

aaraam vetrumai (2)

தமிழில் ‘ஆறாம் வேற்றுமை’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.. இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநயகனாக நடிக்கிறார். கதாநயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் ஸ்பெஷல் என்ன்னவென்றால் இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றிய கதையாம். அதனால் தான் ‘ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்துள்ளார்களாம்.

ஓர் இடம் ஓர் இனம் ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை.. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது.. படத்தில் பேசப்படுவதும் நமக்கு அறிமுகமான மொழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முழு படப்பிடிப்பும் தர்மபுரி சேலம் அரூர் அதிராம்பள்ளி போன்ற இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது.. ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற அபகலிப்டா போன்ற படம் தான் இந்த ஆறாம் வேற்றுமை என்கிறார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.