‘ஆம்பள’ படத்தில் பொம்பள போலீஸ் அட்டகாசம்..!

     

 

சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது ‘ஆம்பள’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் விஷால். ‘மதகஜராஜா’ படத்தின் மூலம் இருவரும் பட்ட மனக்காயங்களுக்கு இந்த ‘ஆம்பள’ மூலம் நிச்சயம் ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.. விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்கிறார்.

படத்தில் இவருக்கு போலீஸ் கெட்டப் இருக்கிறது. அது முழுநீள கேரக்டரா, அல்லது கனவுப்பாடலில் மட்டும் வந்துபோகும் கெட்டப்பா என்பது மட்டும் சஸ்பென்ஸ்.. இந்தப்படத்தில் விஷாலுடன் காமெடிக்கு கைகோர்த்திருக்கும் சதீஷ் தான், போலீஸ் ட்ரெஸ்ஸில் இருக்கும் ஹன்ஷிகாவுடன் செல்பி எடுத்து டிவிட்டரில் தட்டியுள்ளார்.