அவன் – இவன் முன்னிலையில் நடைபெற்ற ஆம்பள ‘இசை வெளியீட்டு விழா..!

 

சரியாக நூறாவது நாள்.. செப்-2௦ல் படப்பிடிப்பை தொடங்கி இதோ இன்று இசைவெளியீட்டு விழாவை நூறாவது நாளில் நடத்தியிருக்கிறார்கள் ‘ஆம்பள’ படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷாலும் இயக்குனர் சுந்தர்.சியும்.. இதிலிருந்தே இவர்களின் வேகத்தை நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.

இன்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் சந்தானம், பிரபு தவிர படக்குழுவினர் அனைவரும் ஆஜராக, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஆர்யா. இந்த டீமை வாழ்த்த குஷ்புவும் வந்திருந்து ஆச்சர்யப்படுத்தினார்.

ஹன்சிகா, சந்தானம், வைபவ், சதீஷ், பிரபு என வழக்கம்போல சுந்தர்.சியின் படங்களில் காணப்படும் திருவிழாக்கோலம் இதிலும் உண்டு, ஹிப் ஹாப் தமிழா இந்தப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதுடன் பாடல்கள் அனைத்தையும் அவரே எழுதி அதில் சிலவற்றை பாட்டியும் இருக்கிறார்.