நாலு தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றி – நெகிழ்ந்த உதயநிதி

சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியானது. பாசிடிவ், நெகடிவ் என இரண்டு விதமான விமர்சனங்கள் இந்த படத்திற்கு இருந்தாலும் தியேட்டர்களை பொருத்தவரை இந்த படம் வசூல் ரீதியாக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தநிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக நன்றி சொல்லும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, “இதற்கு முன்பு நான் நடித்த 4 படங்கள், அவை நல்ல படங்களாக இருந்தும் வரிசையாக தோல்வி படங்களாகவே அமைந்தன. இந்த நிலையில்தான் சைக்கோ வெளியாகியுள்ளது. இந்த படம் நிஜமான வெற்றி என இதோ இங்கே அமைந்திருக்கும் வினியோகஸ்தர்கள் சொல்வதைக் கேட்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து சைக்கோ-2 படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய வினியோகஸ்தர் ஒருவர் இந்த வருடத்தின் முதல் வெற்றிப்படம், தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் தந்த முதல் படம் என்றால் அது சைக்கோ தான் என்று பரபரப்பாக ஒரு தகவலை கொளுத்திப் போட்டுவிட்டு சென்றார்.