ஏ.ஆர்.ரகுமானுக்கு பெருமையாக சொல்லிக்கொள்ள கிடைத்த படம் தான் காவியத்தலைவன்..!.

வசந்த பாலன் டைரக்ஷன்.. ஏ.ஆர்.ரகுமான் இசை என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடித்துள்ள இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் மற்றும் ரேடியன் பிக்சர்ஸ் வருண்மணியன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கூடத்தில் எளிமையான முறையில் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், “நான் அடிக்கடி மஜீத் மஜி என்கிற பெரியவரை சந்தித்து பேசுவேன். சமீபத்தில் அவர் என்னிடம் உங்கள் பாடல்கள் எல்லாமே வெஸ்டர்ன் இசையாகவே இருக்கிறதே.. நமது பாரம்பரிய இசையில் பாடல்கள் போடமாட்டீர்களா என்று கேட்டார். இப்போது நான் அவரிடம் தைரியமாக சொல்லிக்கொள்ள எனக்கு ‘காவியத்தலைவன்’ கிடைத்திருக்கிறது” என பெருமிதத்துடன் பேசினார்.