ஏ.ஆர்.ரகுமான் தனது ட்ரூப்புக்கு பார்ட்டி வைத்தது ஏன்..?


துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து, சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படமும் ஹிட்.. பாடல்களும் ஹிட்.. மணிரத்னம் இதனால் ஹேப்பியாக, இன்னொரு பக்கம் தனது ட்ரூப்பில் இருக்கும் பாடகர்கள், இசைக்கலைஞர்கள், இன்ஜீனியர்கள் அனைவருக்கும் ஹோட்டலில் வைத்து பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படி வெளிப்படையாக சந்தோஷத்தை கொண்டாடுபவரல்ல. ஆனால் இந்தமுறை அவர் அப்படி கொண்டாட்டியதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.. கடந்த வருடம் அவரது இசையில் வெளியான ரஜினியின் ‘லிங்கா’ மற்றும் ‘காவியத்தலைவன்’ ஆகிய இரண்டு படங்கள் சரியாக போகாததுடன், பாடல்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை..

அதேபோல இந்த வருட ஆரம்பத்தில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படம் ஹிட்டானதே தவிர பாடல்களை பொறுத்தவரை ரகுமானுக்கான வழக்கமான வெற்றி அதில் பதிவாகவில்லை. இந்த வருத்தத்தில் இருந்த ரகுமானுக்கு ‘ஓ காதல் கண்மணி’யின் வெற்றி புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. அதனை கொண்டாடவே தனக்கு உறுதுணையாக இருந்த தனது டீமிற்கு விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.