“மணிரத்னம் புத்தகம் படித்திராவிட்டால் ‘8 தோட்டாக்கள்’ இல்லை” ; இயக்குனர் ஸ்ரீகணேஷ்..!

8-Thottakkal-Movie director 1

நாளை (ஏப்-7) மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் வெளியாக இருக்கிறது… இந்தசமயத்தில் அறிமுக இயக்குனரானா ஸ்ரீகணேஷ் என்பவர் டைரக்சனில் அறிமுக ஹீரோ வெற்றி நடித்துள்ள ‘8 தோட்டாக்கள்’ என்கிற படமும் வெளியாகிறது என்பது ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது..

அதற்காக மணிரத்னம் படத்துடன் மோதுகிறோம் என்றெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.. மிஷ்கினின் பாசறையில் பயிற்சி பெற்றவரான இவர் பார்ப்பதற்கு இப்போது தான் கல்லூரியில் சேர்ந்த மாணவர் போல இருக்கிறார்..

“மணிரத்னம் சார் படங்களை பார்த்து ஒரு தலைமுறையே சினிமாவுக்குள் விரும்பி நுழைந்திருக்கிறது.. நானும் கூட அப்படி வந்தவன் தான். மணிரத்னம் படம் என்றாலே இப்படித்தான் என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவருடைய கான்வர்சேஷன் வித் மணிரத்னம்’ புத்தகம் படித்ததும் தான் சினிமா குறித்து இன்னும் ஆழமான பார்வை ஏற்பட்டது.. ஒருவேளை அந்தப்புத்தகத்தை படித்திருக்காவிட்டால் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை உருவாக்கியிருக்க முடியாது” என்று கூட சொல்வேன் என மனம் திறந்து பேசுகிறார் ஸ்ரீகணேஷ்.